அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயர் சூட்டுக - பேரவையில் உதயநிதி கோரிக்கை.
"சட்டப்பேரவை நடவடிக்கைகளை இதுநாள் வரை பார்வையாளனாக மட்டுமே கவனித்து வந்த நான், முதல்முறையாக பங்கேற்பாளனாக அவையிலிருந்து செயலாற்றும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளேன்"
- உதயநிதி, திமுக எம்.எல்.ஏ.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரை உலகில் நிறைய படங்களில் நடித்து அதன் மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆனவர். அவரது நடிப்புக்கு என்று தமிழகத்தில் நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள்.
சினிமா ஒரு பக்கம் செல்ல அது கூடவே அரசியலையும் செய்து வருகிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். தற்போது திமுக எம்எல்ஏ வாக பதவி வகித்து வருகிறார். சற்று முன்பு சட்டப்பேரவையில் ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளார்.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் ஒழிப்புப் போராளி அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சூட்ட வேண்டும் என்று தங்கை அனிதாவின் சகோதரர் மணிரத்னம் உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அப்படி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட. இக்கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றித் தருவார் என நம்புகிறேன்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்’’.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Tags
Politics
