.

தனுஷின்" நானே வருவேன்"படத்திற்கான முதல்கட்ட போஸ்டர் வெளியீடு!

 தனுஷின் கர்ணன் படத்திற்கு பிறகு அடுத்த படம் என்னவாக இருக்கும் ? என்று தனுஷ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபட்டது. 


கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கு 'நானே வருவேன்' என்று பெயரிடப்பட்டு போஸ்டரை வெளியிட்டார் செல்வராகவன்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது  ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எடுக்கப்பட உள்ள புதிய படத்திற்கு " நானே வருவேன் " என்பதுபோல தலைப்புடன் அவரது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதான் அடுத்த படமாக எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் க்கப்படும் திரைப்படம் அனைத்தும்  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை தரக்கூடியவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


இதனை அடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். தற்போது அவரது அடுத்த படமான ' நானே வருவேன் ' என்ற படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகின்றன.



இதனையடுத்து அவரது ரசிகர்கள் நானே வருவேன் படத்திற்காக மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்கள் OTT தளத்தில்தான் வெளியிடப்பட்டது.இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுமா? அல்லது OTT தளத்தில் வெளியிடப்படுமா? என்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பம்  பரவி வருகிறது.

Previous Post Next Post

نموذج الاتصال