தனுஷின்" மாறன் " படத்திற்கான போஸ்டர் வெளியீடு !!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். அவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
அசுரன் படத்திற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார். தற்போது அசுரன் படத்தை தெலுங்கில்" நாரப்பா " என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதேபோல தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களான வடசென்னை, பட்டாஸ் , கர்ணன் முதலிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் தனுஷின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? என்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். இந்த நிலையில் நடிகர் தனுஷின் அடுத்த படத்திற்கான போஸ்டர் ஒன்று தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது அடுத்த படத்திற்கு " மாறன் " என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். "மாறன் " படத்திற்காக காத்துக் கொண்டிருப்பதாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
Tags
Cinema
