ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தக்கூடிய Pattern Lock, Screen lock இவையெல்லாம் சாதாரண பட்டன் ஜியோ மொபைலில் பயன்படுத்த முடியுமா?
முடியும்! ஆனால் pattern lock வைக்க முடியாது. Screen lock வைக்க முடியும்.
ஜியோ பட்டன் மொபைலில் screen lock வைப்பதால் என்னென்ன நன்மைகள்?
ஆண்ட்ராய்டு மொபைலை போல நமது மொபைலிலம் யாரும் அவ்வளவு ஈசியாக எடுத்து உபயோகப் படுத்த முடியாது. ஸ்கிரீன் லாக் பாஸ்வேர்டு மட்டுமே உள்ளே செல்ல முடியும்.
ஜியோ பட்டன் மொபைலில் எப்படி ஸ்கிரீன் லாக் வைப்பது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
* ஜியோ போன்ல center button கு மேல க்ளிக் பண்ணா செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு போங்க.
* செட்டிங்ஸ் ல சைட்ல தள்ளினே வந்தா privacy and security அப்படின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும்.
* அந்த ஆப்ஷன் கீழே வந்தா screen lock அப்படின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும்.
* அந்த screen lock ல போன நான்கு நம்பர் ல பாஸ்வோட் வைக்கச் சொல்லும்.
* 4 நம்பரில் ஒரு பாஸ்வேர்ட் வைத்துவிட்டால் எப்பொழுதெல்லாம் உங்கள் ஜியோ போனை ஆன் செய்கிறீர்களோ அப்போதெல்லாம் அந்த பாஸ்வேர்ட் உங்களது மொபைல் டிஸ்ப்ளே ஆகும்.
நீங்கள் எப்பொழுது எல்லாம் உங்கள் மொபைலை ஆன் செய்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த ஸ்கிரீன் லாக் வரும். நீங்கள் போட்டு வைத்திருக்கும் அந்த நாலு நம்பர் இல்லாம பாஸ்வேர்ட் போட்டால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். உங்களுக்கு ஸ்கிரீன் லாக் பிடிக்கவில்லையென்றால் ஸ்கிரீன் லாக் ஐ அதே செட்டிங்ஸ்க்கு போய் ஆப் செய்து விடுங்கள்.
