இன்றைய நவீன உலகில் மொபைல் மூலமாகவே நாம் மற்றவருக்கு கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது கொடுத்த கடனை மொபைல் மூலமாக வசூலித்தால் என்ன?
ஆமாம். உண்மைதான்! ஆன்லைன் மூலம் நாம் மற்றவருக்கு கொடுத்த கடனை அசல் வட்டியுடன் கணக்கு வழக்கு பார்த்து யார் யார் எவ்வளவு தரவேண்டும்? யார் யார் நம்மிடம் கடன் வாங்கி உள்ளார்கள் !என்பதை பற்றி தெளிவாக நமக்கு வழிகாட்ட ஒரு அப்ளிகேஷன் உள்ளது.
* நீங்கள் ஆன்லைன் மூலம் கொடுத்த கடனை வசூலிக்க கூகுள் பிளே ஸ்டோர் க்கு சென்று khatabook என்கிற ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
* இன்ஸ்டால் செய்த பிறகு இந்த அப்ளிகேஷனை ஓப்பன் செய்தால் உங்களுடைய மொபைல் நம்பர் கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்.
* பிறகு நீங்கள் யாருக்கெல்லாம் கடன் கொடுத்தீர்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்த அடுத்த வினாடியே உங்களுடைய வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் வெல்கம் போனசாக அவர்களை கொடுத்துவிடுவார்கள். எனவே தாராளமாக நீங்கள் எந்த அப்ளிகேஷனை உபயோகிக்கலாம்.
* வங்கி விவரங்களை கொடுப்பதன் மூலம் நீங்கள் கடன் கொடுத்தவர்கள் இடம் இருந்து உங்களுடைய வங்கி மூலம் பணம் பெற்றுக்கொள்ள முடியும்.
