தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 தேதிகள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் "பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள், மீண்டும் சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்பும் விதமாக ஜனவரி 18ம் தேதியும் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும்" என மக்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் ஜனவரி 18ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக முன்னணி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் அரசு தரப்பில் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
