.

வெள்ளையரை வியர்க்க வைத்த "தியாக பூமி" திரைப்படம்-Thinachuvadi

20.5.1939 ம் ஆண்டு வெளியான தியாக பூமி‘ திரைப்படம் தமிழ்த் திரையுலகில் பல ‘முதல்’களை உண்டாக்கிய திரைப்படம். திரைப்படம் கதையிலேயே சுவாரஸ்யமுண்டு.

அன்றைய தமிழ்ப்பட இயக்குனர்களில் பிரபலமானவரான கே.சுப்ரமணியம், எழுத்தாளர் கல்கியை அணுகி, “தற்கால நிலைமைக்கேற்றபடி ஒரு சமூகப் படம் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். உங்களிடம் ஏதேனும் கதையிருந்தால் சொல்லுங்கள்.” என்று கேட்டார்.

கல்கி, “இப்போது ஒரு புதிய தொடர் எழுதுவதாக இருக்கிறேன். இது சினிமாவுக்குச் சரி வருமா என்று பாருங்கள்..” என்று தான் எழுதவிருந்த ‘தியாகபூமி’ கதையைச் சொன்னார். கே.சுப்ரமணியத்துக்கு மிகவும் பிடித்துப் போக, கல்கியிடம் கதை உரிமையை வாங்கினார்.

இந்த விஷயத்தை அறிந்த ஆனந்தவிகடன் ஆசிரியரும், திரைத்துறையில் விநியோகஸ்தருமாக இயங்கிக் கொண்டிருந்த திரு.எஸ்.எஸ்.வாசன் தன் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் கதையைத் தொடராக வெளியிட முன்வந்தார்.

1938ல் கதை படமாக ஆரம்பித்த அதே நேரத்தில் ஆனந்த விகடனில் தொடராகவும் வெளியாக ஆரம்பித்தது. ஓவியங்களுடன் கதை வெளிவருவதற்குப் பதிலாக படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டில்களுடன் கதை வெளியானது. இந்த விஷயம் அந்நாளில் புதுமையாக இருந்ததால் மக்கள் மிக ரசித்தார்கள். ஆனந்த விகடன் விற்பனையும் உயர்ந்தது;

சுதந்திரப் போராட்டத்திற்கு மிகவும் உத்வேகம் ஊட்டும் கதையாகவும், வசனத்தில் காந்தியடிகளின் போராட்டத்திற்கும், தேச விடுதலைக்கும் தார்மீக ஆதரவு தரும்படியாகவும் எழுதப்பட்டிருந்ததால் பிரமாதமான வரவேற்புடன் படம் ஓட ஆரம்பித்தது.

தியாகபூமி புடவை, தியாகபூமி பார்டர், உமாராணி புடவை, என்பவையெல்லாம் பெண்களின் பேஷன்’ ஆக மாறியது.

மோஷன் பிகசர்ஸ் என்ற ஸ்டுடியோவில் உட்புறக் காட்சிகளும், அடையாறு, பிராட்வே, மயிலாப்பூர், மண்ணடி, பாரீஸ் கார்னர் மற்றும் சென்னையின் சில தெருக்களில் வெளிப்புறப் படப்பிடிப்பும் நடந்தது. மோஷன் பிக்சர்ஸில் ஷுட்டிங் பார்க்க வந்த எஸ்.எஸ்.வாசன் பின்னாளில் அதே ஸ்டுடியோவை வாங்கி ஜெமினி ஸ்டுடியோஸ்’ ஆக மாற்றினார். ஆச்சரியகரமான சம்பவம்!

ஏழே மாதங்களில் ‘தியாக பூமி’ மொத்தப் படப்பிடிப்பும்முடிந்துவிட்டது.

தடை செய்யப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையும் தியாகபூமி’க்கே உரித்தானது. இத்தனைக்கும் கடைசி இரண்டு ரீல்களில் மட்டுமே சுதந்திரப் போராட்டக் காட்சிகளும், அதற்கு உத்வேகமளிக்கும் வசனங்களும், பாடல்களும் இடம் பெற்றிருந்தன.

அவை வலிமையாக இருந்ததால் அன்றைய ஆங்கிலேய அரசு தடையுத்தரவு பிறப்பித்தது. தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்தினமே எப்படியோ எஸ்.எஸ்.வாசனுக்குத் தகவல் வந்துவிட்டது.

அவர் கே.சுப்பிரமணியத்துடன் கலந்து பேசி புதுமையான ஒரு விஷயத்தைச் செயதார்.

அடுத்த இரண்டு தினங்கள் படம் விடிய விடிய இடைவெளியின்றி ஓட்டப்படும், இலவசமாக மக்கள் பார்க்கலாம் என்றோர் அறிவிப்பைச் செய்தார். மக்கள் வெள்ளம் சென்னை தியேட்டர்களை மொய்த்தது.

மக்கள் திரளால் கெயிட்டி திரையரங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததும் நடந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.’தியாக பூமி’யை கே.சுப்ரமணியம் தயாரித்து இயக்கியிருந்தார்.

கதாநாயகி சாவித்திரியாக எஸ்.டி.சுப்புலட்சுமியும், கதாநாயகன் ஸ்ரீதரனாக கே.ஜே. மகாதேவனும் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதியதுடன் சம்பு சாஸ்திரியாகவும் நடித்திருந்தார். சாருமதியாக படத்தில் நடித்த பேபி சரோஜா பெரும் புகழ் பெற்றார்.

டி.கே.பட்டம்மாள் பாடிய எழுச்சியூட்டும் தேசபக்திப் பாடல்கள், சுதந்திரப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த அந்நாளில் மிகவும் கவனம் பெற்றன. சாவித்திரியாக நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமியும், சம்பு சாஸ்திரியாக நடித்த பாபநாசம் சிவனும், சாருமதியாக நடித்த பேபி சரோஜாவும் தாங்களே சொந்தக் குரலில் அவர்கள் பங்குபெற்ற பாடல்களைப் பாடியிருந்தனர் மொத்தம் 17 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

புகுந்த வீட்டில், சாவித்திரி பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள். இது பற்றி அவள், தன் தந்தை சம்பு சாஸ்திரிக்கு (பாபநாசம் சிவன்) எழுதும் கடிதங்களை, சித்தி எரித்து விடுகிறாள். மாமியார் வீட்டில் இருந்து விரட்டப்படும் சாவித்திரி, கிராமத்துக்கு வர, சம்பு சாஸ்திரிகள் ஊரைவிட்டே சென்ற விவரம் அறிந்து நிர்க்கதியாகிறாள்.

கிராமத்தில் வெள்ளம் ஏற்பட, சேரிவாழ் மக்களுக்கு தன் நிலத்தில் தங்க இடம் தருகிறார் சம்பு சாஸ்திரி, ஜாதி பேதம் பாராமல் தாழ்த்தப்பட்டவர்களுக் கு உதவும் அவர் மீது ஏற்கனவே கடும் சினத்திலிருந்த ஊர்க்காரர்கள், அவரை ஊரைவிட்டுத் தள்ளி வைக்கிறார்கள். எனவே அவர் சென்னைக்கு வருகிறார்.

சென்னை வரும் சாவித்திரி, அங்கே ஓர் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைக்கு (பேபி சரோஜா) தாய் ஆகிறாள். வாழ வழி தெரியாமல் குழந்தையுடன் அவள் தற்கொலை செய்து கொள்ள முயல, அங்கே தந்தை சம்பு சாஸ்திரியின் குரல் கேட்க, குழந்தையை விட்டு விட்டு சென்று விடுகிறாள். தன்னிடம் வந்து சேர்ந்த அக்குழந்தையை, தன் பேத்தி என்று அறியாமலேயே, சாருமதி என்று பெயரிட்டு வளர்க்கிறார் சாஸ்திரி.

சாவித்திரி, பம்பாய் சென்று தன் பணக்கார அத்தையின் உதவியினால் உயர் கல்வி பயில்கிறாள். அத்தை இறந்ததும் அவளது ஏராளமான சொத்துக்களுடன், நாகரீக மங்கையாக ‘உமாராணி’ என்ற பெயரில் புகழ் பெற்று சென்னை வருகிறாள். இதற்கிடையில் ஐந்தாண்டுகள் உருண்டோடுகின்றன.

இப்போது தன் மகள் என்று தெரியாமலேயே சாருமதியை சந்தித்து பாசம்கொள்கிறாள், உமாராணி. அச்சமயம் ஒரு மோசடி குற்றத்துக்காக கைது செய்யப்படும் ஸ்ரீதரனை மீட்கிறாள். தன் மனைவி சாவித்திரிதான் உமாராணி என்பதை அறியும் ஸ்ரீதரன், அவளுடன் மீண்டும் வாழ விரும்புகிறான். ஆனால், அவன் கோரிக்கையை சாவித்திரி நிராகரிக்கிறாள்.

அவள் தன்னுடன் வாழவேண்டும் என்று கோர்ட்டில் வழக்குத் தொடருகிறான், ஸ்ரீதரன். ஆனால் சாவித்திரியோ, கர்ப்பிணி என்றும் பாராமல் என்னை விரட்டி அடித்த அவருடன் இனி வாழமாட்டேன். வேண்டுமானால், நான் வசதியுடன் இருப்பதால் அவருக்கு ஜீவனாம்சம் தருகிறேன்’ கும் என்று கோர்ட்டில் கூறுகிறாள். தன் மகள்தான் சாருமதி க் என்பதையும் கோர்ட்டில் வெளியிடுகிறாள்.

“போனதெல்லாம் போகட்டும். இனிமே ஸ்ரீதரன்சரியாக இருப்பான் நம்நாட்டில் பாரத தேசம்எத்தனை பேர், எத்தனை இயாகங்கள் செய்கிறார்கள்!அதிகாலத்திலிருந்தே தியாகத்துக்குப் பேர்போனதும்மா, அதனால்தான்இதைத் தியாகபூமின்னு சொல்லுவாங்க” என்று அறிவுரைக்கிறார். சம்பு சாஸ்திரி

கோர்ட்டில் கணவனுடன்தான் சாவித்திரி சேர்த்து வாழ வேண்டும் என்று தீரப்பு வத்துவிட, தன் சொத்துக்கள் அவிைத்தையும் சாருமதி பேருக்கு மாற்றிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பிறைக்குப் போகிறான் சாவித்திரி.

இதற்கிடையில் மனம் திருத்தியிருந்த ஸ்ரீதரனும் சுதந்திரப் போராட்டத்தில்

ஈடுபட்டு, கைது செய்யப்பட சாவித்திரியும், ஸ்ரீதரனும் ஒரே லேனில் ஏற்றப்படுகிறார்கள் பிரிந்த குடும்பம் ஒன்று சேருகிறது

‘தியாக பூமி தடை விதிக்கப்படுவதற்கு முன்பும், தடை நீக்கப்பட்ட பின்பும் நன்றாக ஓடி வகுலைக் குளித்த படம் பெரும் வகுளிலக் குவித்த ‘பார்க் பஸ்டர்’ என்கிற வகையில் முதலாவதாக சொல்லத்தக்க படம்.

சுதாநாயகியாக நடித்த எஸ்டி கப்புலடசுமி 1936ல் வெளியான பக்த்’குசேலா’ படத்தில் கிருஷணராக ஆண் வேடமிட்டு நடித்தவர். ஆஸ் வேடமிட்டு நடித்த முதல் நடிகை என்பதுடன், அப்படத்தில் இரண்டு பாத்திரங்களில் நடித்ததால் தமிழில் இரட்டை வேடத்தில் நடித்த முதல் நடிகையும் இவரே.

பொன்வியில் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘அலைஓசை’ போன்ற கல்சியின் பல தொடர்கள் பலமுறை மறுவெளியீடாக வந்தாலும், ‘தியாகபூமி’ விசுடனில் வந்த பின் ஒருமுறைதான் மறுபடி கல்கியில் தொடராக வந்தது. 1993ம் ஆண்டு கல்கியில் வெளியான சமயம் புகைப்படங்களை மாடலாக வைத்து ஓவியங்களுடன் தொடர் வெளியானது. தமிழின மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கல்கியின் கதைக்கு அப்போதைய மிக இளம் ஓவியரான ஸ்யாம் ஓலியம் வரைந்திருந்தார்.
Previous Post Next Post

نموذج الاتصال