.

மருந்துகள் என்றால் என்ன ? மருந்துகளின் சிறப்பியல்புகள்

மருந்துகள் (Drugs) 

வியாதிகளை கண்டறியவும், தடுக்கவும், குணப்படுத்தவும் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளே மருந்து எனப்படும்.

 மருந்தானது ஒரேயொரு வேதிச் சேர்மமாகவோ அல்லது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருட்களின் சேர்க்கையாகவோ இருக்கலாம். 

மருந்துகள் என்றால் என்ன ?   மருந்துகளின் சிறப்பியல்புகள்

WHO வரையறையின்படி, நோயாளியின் நலனிற்கு உகந்த வகையில் உடற்கூறு செயல்பாட்டை மாற்றவல்ல அல்லது நோயைக் குணப்படுத்த வல்ல பொருளே மருந்து எனப்படும்.

மருந்தின் சிறப்பியல்புகள் :

ஒரு மருந்து பெற்றிருக்க வேண்டிய சிறப்பியல்புகள்: 

 1. நச்சுத்தன்மை அற்றதாய் இருக்க வேண்டும்.

2. மிகக் குறைந்த பக்க விளைவுகளைப் (side-effects) பெற்றிருக்க வேண்டும்.

3. இயல்பான உடற்கூறு செயல்பாடுகளுடன் இடையீடு எதுவும் பெற்றிருக்கக் கூடாது. 

4. மருந்தை ஏற்கும் திசுக்களைப் பாதிக்கக் கூடாது.

5. தேவையான உறுப்பினைச் சென்றடைந்து செயல்படக் கூடியதாய் இருக்க வேண்டும். 

6. பாதுகாப்புடனும் திறனுடனும் செயல்பட வேண்டும். 

7. சிறிது காலம் பயன்படுத்திய பிறகு, அம்மருந்தை எதிர்கும் தன்மையை திசுக்களுக்கு உண்டாக்க கூடாது.

ஒவ்வொரு மருந்திற்கும் பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட உகந்த அளவு (optimum dosage) உண்டு. அந்த அளவைக் காட்டிலும் குறைவெனில் செயல்பாடு எதுவும் இருக்காது. மருந்தின் செறிவு அதிகமெனில் அது நச்சாக மாறுகிறது.

Previous Post Next Post

نموذج الاتصال