.

திராவிட இயக்கங்கள்-தமிழக அரசியல்

இக்காலத்திலேயே பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் அண்ணா என்று அழைக்கப்பட்ட திரு சி.என். அண்ணாதுரை அவர்களின் திராவிட முன்னேற்றக் கழகமும் பரவலாக மக்களின் சுவனத்தைக் கவர்ந்து வளர்ந்து வத்தள அண்ணா தன் பேச்சாலும், எழுத்தாலும் தமிழகத்தில் ஒரு சிநதனை மாற்றத்தை ஏற்படுத்தி வந்தார்.

திரு. சி.என். அண்ணாதுரை ஆட்சி

அதன் விளைவாக 1967ஆம் ஆண்டு அண்ணாவிடம் மக்கள் ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்தனர் அவரது ஆட்சியின் படியரிசித் திட்டம் ஏழை மக்களுக்கு உதவும் திட்டமாக அமைந்தது கலப்புத் திருமணத் தம்பதியருக்கு தங்கப் பதக்கம் வழங்கி அண்ணா அத்தகைய திருமணங்களை மாக்குவித்தார்.

சீரணிப்படை தொடங்கிப் பொதுமக்களையும் நல்ல பணிகளில் ஈடுபடுத்தினார். 1968இல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் சிறப்பாக நடத்தினார் தமிழ்நாடு என்னும் பெயரினைச் சட்டத்தின் மூலம் நிலைபெறுச் செய்தவர் உலக வணிகக் கண்காட்சியும் இவர் காலத்தில் நடந்தது. மிகக் குறுகிய காலமே இவர் ஆடசியில் இருந்தார்.

Previous Post Next Post

نموذج الاتصال