இங்கு ஒரு முழுப் பொருளைச் சமப் பகுதிகளாகப் பிரித்து அதில் ஒவ்வொரு பகுதியையும் பின்னும் என்கிறோம். ஒரு பொருளிலிருந்து அல்லது குழுவாக உள்ள பொருள்களின் மொத்தச் சுமப் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி அல்லது பகுதிகளைக் குறிப்பதைப் பின்னம் எனக் கூறலாம் .
எடுத்துக்காட்டாக,
ஒரு பீஸ் கேக்கு துண்டை 2 நபர்கள், 3 நபர்கள் மற்றும் 4 நபர்களுக்கிடையே பகிர்ந்துகொள்வதைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
இரண்டு நபர்கள் என்றால் - 1/2
மூன்று நபர்கள் என்றால்- 1/3
நான்கு நபர்கள் என்றால் - 1/4
முரளியிடம் ஒரு கடலை மிட்டாய் இருந்தது அதை இராணியோடு சமமாகப் பகிர்ந்துகொள்ள விரும்பினார்.எனவே இரண்டு பங்களாக பிரித்தார் ஒவ்வொருவருக்கும் இரண்டில் ஒரு துண்டு கிடைத்தது. இது கடலை மிட்டாயில் பாதியாகும்.
அவர்களுடைய பங்கில் ஒரு பாதியைக் காலை இடைவேலையிலும், மற்றொரு பாதியை மாலை இடைவேளையிலும் சாப்பிட முடிவு செய்தார்கள். அவர்களிடம் இப்போதுள்ள துண்டுகளின் எண்ணிக்கை 4 ஆக மாறியுள்ளது.
ஒவ்வொருவருக்கும் 4 துண்டுகளில் 2 துண்டுகள் கிடைக்கப் வற்றுள்ளன அதாவது - இதுவும் முழு கடலை மிட்டாயில் பாதியாகும். இரண்டு வகையான பங்கீட்டிலும் அவர்களுக்குப் பாதி கடலை மிட்டாயே கிடைத்துள்ளது.