கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
வலிமை திரைப்படம் போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு வருடமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்து கடைசியாக பிப்ரவரி 24ஆம் தேதி 2022 ஆண்டில் அனைத்து திரையரங்குகளிலும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இணையபோவதாக நடிகர் அஜித் தெரிவித்திருக்கிறார்.
அந்த திரைப்படத்திற்காக நடிகர் அஜித் குமார் தனது உடல் எடையை குறைத்து வருகிறார். இந்த தகவல் கூட சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
தற்போது #AK 61 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கப் போவதாகவும் வரும் தீபாவளிக்கு தமிழக மக்களுக்கு நல் விருந்தாக திரைப்படத்தை வெளியிட போவதாக அறிவித்து இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத்.
இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #AK 61 என்கிற ஹேஸ்டேக்கை பகிர்ந்து பிரபலப் படுத்தி வருகிறார்கள்.
