.

நொதித்தல் என்றால் என்ன? நொதித்தலின் வகைகள் யாவை?

சில உயிரினங்கள் ஆக்ஸிஜன் அற்ற நிலையில் சுவாசிக்கிறது. இந்த நிகழ்ச்சி நொதித்தல் அல்லது காற்றிலா சுவாசித்தல் எனப்படும் மூன்று வகையான நொதித்தல் உள்ளது.

  • ஆல்கஹாலிக் நொதித்தல்
  • லாக்டிக் அமில நொதித்தல்
  • கலப்பு அமில நொதித்தல்

நீர் தேங்கிய மண்ணில் உள்ள வேர்களின்செல்களில் ஆல்கஹாலிக் நொதித்தல் முறையில் சுவாசிக்கிறது ஏனெனில் ஆக்சிஜன் அற்ற சூழலில் பைருவிக் அமிலம் எத்தில் ஆல்கஹால் மற்றும் CO வாக மாறுகிறது.

ஈஸ்ட்டின் (சக்காரோமைசிஸ்) பல சிற்றினங்களில் காற்றிலா முறையிலும் சுவாசித்தல் நடைபெருகிறது. இந்த வினை இரண்டு படி நிலைகளில் நடைபெருகிறது.

ஆல்கஹாலிக் நொதித்தலின் தொழிற்சாலைப் பயன்கள் :

  1. ரொட்டி, கேச், பிஸ்ட்டுகள் தயாரிப்பதற்குப் பேர்ரிகளில்பயன்படுகிறது.

2) ஒயில் மற்றும் ஆல்கஹாலிக் மதுபானங்கள் தயாரிக்க மதுபானத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

3) வினிகர் மற்றும் டானின்கள் தோல் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

4) எத்தனாலிருந்து கேசோஹால் (பிரேசிலில் கார்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள்) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

லாக்டிக் அமில நொதித்தல் :

சில பாக்டீரியங்கள் (பேசில்லஸ்) பூஞ்சை மற்றும் முதுகெலும்பிகளின் தசைகளில் பைருவிக் அமிலங்களில் இருந்து லாக்டிக் அமிலமாக மாறுகிறது.

கலப்பு அமில நொதித்தல் :

இந்தவகை நொதித்தல் எண்டிரோபாக்டீரியேசியின் சிறப்பு பண்பு. நொதித்தலின் விளைவாக லாக்டிக் அமிலம், எத்தனால், ஃபார்மிக் அமிலம் வாயுக்களான CO, மற்றும் H, உருவாகின்றன.

காற்றிலா சுவாசித்தலின் பண்புகள் :

  1. காற்று சுவாசத்தை விடக் காற்றிலா சுவாசித்தல் குறைந்த திறனுடையவை.

2) ஒரு மூலக்கூறு குளுக்கோஸிலிருந்து குறைந்த எண்ணிக்கையுடைய ATP மூலக்கூறுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

3) CO, உருவாக்கம் மற்றும் ஒளிச்சேர்க்கையில் கார்பன் நிலைநிறுத்தப்படுதல் போன்றவற்றிற்கு இது பயன்படுகிறது.

Previous Post Next Post

نموذج الاتصال