சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு மகிழ்ச்சியான விஷயம் நடந்தாலும் அதில் கொண்டாட்டங்களுக்கும் முக்கிய இடம் வகிப்பது சாக்லேட்.
நமக்கு பிடித்தவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கூட நம்முடைய நினைவிற்கு முதலில் வருவது சாக்லேட். சாக்லேட்டுகளை பார்த்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்டுகள் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன.
இப்படி நம்முடைய கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் சாக்லெட்டை கொண்டாடுவதற்கும் தனியாக ஒருநாள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஜூலை ஏழாம் தேதி அன்று ஒவ்வொரு வருடமும் உலக சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு சாக்லேட் பரவ ஆரம்பித்த நாளை அடிப்படையாகக் கொண்டுதான் சாக்லேட் தினம் ஜூலை ஏழாம் தேதி என கொண்டாடப் படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி தெளிவான எந்த ஒரு வரலாறும் கிடையாது. சாக்லேட் உருவான வரலாறு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தற்போது மூலைமுடுக்குகளில் எல்லாம் மிக எளிதாக கிடைக்கக்கூடிய சாக்லேட் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை மெசோ அமெரிக்காவில் மட்டுமே கிடைத்தது. தற்போதைய மத்திய தென்னமெரிக்கா பகுதியை உள்ளடக்கிய பகுதிகள் அந்த காலத்தில் மெசோ அமெரிக்கா என அழைக்கப்பட்டது.
ஆனால் நாம் தற்போது இருக்கும் சாக்லேட்டை அவர்கள் அப்போது ருசிக்கவில்லை. பண்டைய கால மக்கள் சாக்லெட்டை ஒரு பானமாக தான் அருந்தி வந்தார்கள்.
கொக்கோ மரங்களிலிருந்து விதைகளை பிரித்து எடுக்கும் முறையை அவர்கள் தெரிந்து கொண்ட பிறகு அதை வைத்து வித விதமான பானங்கள் தயாரிக்க ஆரம்பித்தனர்.
கொக்கோ புளியுடன் காய்ந்த மிளகாய் உள்ளிட்டவற்றை கலந்து காரசாரமான பானமாக அதை அருந்தி வந்தார்கள். அப்போது சாக்லேட் சாதாரணமாகவே இருந்தது. அது இறைவனால் மனிதனுக்கு வரப்பிரசாதமாக அனுப்பப்பட்ட உணவு என்று மெசோ அமெரிக்காவில் மக்கள் நம்பினார்கள்.
- அரச குடும்பங்களின் விருதுகளில் தவிர்க்கமுடியாத பானமாக மாறியது சாக்லேட்
- போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு சாதனங்களை கொடுத்து கௌரவிக்கும் வகையில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது.
- அதனைப் போலவே மதச் சடங்குகளிலும் சாக்லேட் பானங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
- 1559 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த கொக்கோ கோட்டை மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்த பிறகு அதை பயன்படுத்தும் முறைகளும் படிப்படியாக மாற ஆரம்பித்தது.
அதன் மருத்துவ குணங்கள் இருப்பதால் உடல்நிலை சரியில்லாத கொடுக்க ஆரம்பித்தார்கள் ஏற்படுத்தக்கூடிய செரடோனின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது சுரக்க செய்கிறது இப்படி கசப்பான பானமாக இருந்த சாக்லேட்டை சிறிது தேன் கலந்து சுவைத்த பின் அதன் சுவை சூப்பராக மாறியதை கண்டுபிடித்தனர்.
அதன் பிறகு அதனுடன் இனிப்பு சுவையை சேர்க்க ஆரம்பித்தனர். அதன் தேவை அதிகரித்த பிறகு மோசமான சில சம்பவங்களும் நடக்க ஆரம்பித்தது. அதாவது கொக்கோ மரங்களை உற்பத்தி செய்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
இதனை அதிக அளவில் பயிர் இடுவதற்காக பிரியன் மற்றும் ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக பயன்படுத்த ஆரம்பித்தனர். 1872ஆம் ஆண்டு தான் திடமான சாக்லெட்டை தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தனர். நாம் தற்போது உண்ணும் சாக்லேட்டுக்கு அதுதான் அடிப்படையாக அமைந்தது.
அதனைப் போலவே மக்கள் 1875 ஆம் ஆண்டுகளில் சாக்லேட் பால் பவுடர் சேர்த்து மில்க் சாக்லேட் கண்டுபிடித்தனர். அப்படியே படிப்படியாக மேற்கு ஆப்பிரிக்கா வரை சென்ற கொக்கோ தற்போது முக்கிய உற்பத்தி தொழிலாக மாறியது. உலக அளவில் இதனை அதிக உற்பத்தி செய்யும் நாடுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் என்ற பகுதி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
ஆப்பிரிக்காவுக்கு சென்ற பிறகு பல சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தது. இதனை அதிக அளவு உற்பத்தி செய்வதில் போட்டி ஏற்பட்ட நிலையில் ஆப்பிரிக்காவில் குழந்தை தொழிலாளர் முறையும் அதிகரித்தது.
சுமார் இரண்டு மில்லியன் குழந்தைகள் அடிமைகளாக நடத்தப்பட்டு கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் இன்று ரசித்து ருசித்து சாப்பிட கூடிய சாக்லேட்டின் வரலாறு இப்படிப்பட்ட கசப்பான சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது.
சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
- டார்க் சாக்லேட் ஊட்டச் சத்து மிகுந்தவை.
- ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் என்று சொல்லப்படும் உடலுக்கு தேவையான அவள் இதில் மிகுந்து காணப்படுகிறது.
- ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்கிறது .
- உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகரித்து மற்றும் தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
- மனித மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதயக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்க உதவுவதோடு உடல் சருமத்தை வெயிலிடம் இருந்து பாதுகாக்கிறது.
