மனிதனுக்கு நன்கு வளர்ச்சியடைந்த நரம்பு மண்டலம் அமையப் பெற்றுள்ளது.
நரம்பு மண்டலம் நியூரான்கள் அல்லது நரம்பு செல்களால் ஆனது. இம்மண்டலத்தில் மூளை, தண்டுவடம், உணர்ச்சி உறுப்புகள் மற்றும் நரம்புகள் உள்ளன.
நரம்பு மண்டலமும், நாளமில்லாச் சுரப்பி மண்டலமும் இணைந்து கடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய இரு முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றன.
இது மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி ஆகும். இது உடல் முழுவதும் நடைபெறும் அனைத்து செயல்களையும் கட்டுபடுத்தி ஒழுங்குபடுத்துகிறது.
இதையும் படிக்க : சிறுத்தையை கைத்தடியால் அடித்து விரட்டிய பெண்மணி!
மேலும் இது நினைவாற்றல் மற்றும் ஞாபகசக்தி ஆகியவற்றின் உறைவிடமாக அமைகிறது.
நமது மூளை ஒரு சிக்கலான உறுப்பு ஆகும். இது மண்டையோட்டின் கபாலக் குழியினுள் உள்ளது. இது திசுக்களாலான மூன்று உறைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இதையும் படிக்க : வங்கி பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி உத்தரவு!
இந்த சவ்வுகளுக்கு மூளை உறைகள் (Meninges) என்று பெயர். மூளையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை முன் மூளை, நடு மூளை மற்றும் பின் மூளை என்பவையாகும். மூளையானது உடலின் மத்தியக் கட்டுப்பாட்டு மையம் ஆகும்.

