கடந்த சில வாரங்களுக்கு தங்கம் மற்றும் ஆபரண விலை அதிகரித்துக் கொண்ட நிலையில் தற்போது திடீர் மாற்றம் ஏற்படுகிறது.
தங்கம் விலை தொடர்ச்சியாக இன்றை நாளிலும் சரிவை சரிந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 37088-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
இதனால் ஒரு கிராம் ரூ.4636-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 1.90 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.60.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.60400-க்கும் விற்கபட்டு வருகிறது.
