.

அன்னை மொழியே ,அழகார்ந்த செந்தமிழே- பத்தாம் வகுப்பு மனப்பாடப்பகுதிl

அன்னை மொழியே - அழகார்ந்த செந்தமிழே !

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!        -பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பலவுள் தெரிக :

1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் ?

அ) எந் + தமிழ் + நா

ஆ) எந்த + தமிழ் + நா ஈ) எந்தம் + தமிழ் + நா

இ) எம் + தமிழ் + நா

[விடை: இ) எம் + தமிழ் + நா]

குறுவினா :

1. "மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”         இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

விடை :

* சீவக சிந்தாமணி,

* வளையாபதி, • குண்டலகேசி

இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.

சிறுவினாக்கள்

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

"அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!"

* அன்னை மொழியே! அழகான செந்தமிழே!

* பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!

* குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!

* பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!

* பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!

* கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!

* பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்.

"முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!"

Previous Post Next Post

نموذج الاتصال